வடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகர் திடீர் மரணம்..பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்...
By Chandru
சமீபத்தில் நடிகர் மனோ கார் விபத்தில் காலமானார். இந்நிலையில் ஆறு படத்தில் நடித்த காமெடி நடிகர் ஜெயச்சந்திரன் திடீரென காலமானார்.
சூர்யா நடித்த ஆறு படத்தில் வைகை வடிவேலுவின் தக்காளி சட்னி காமெடி மறக்க முடியாது. அதில் ரத்தம் வழிந்தபடி நடந்து வரும் ஒருவரிடம் நடிகர் வடிவேலு என்ன இது கழுத்தில் ரத்தம் என கேட்பார்.
அதற்கு அவர் நான் தண்டவாளத்தில் தூங்கி விட்டேன். அப்போது 4,5 இரயில்கள் என் கழுத்தில் ஏறி சென்றதாக கூறுவார் அவர் தான் ஜெயச்சந்திரன். இவர் நேற்று அவரது வீட்டு பாத்ரூமிற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது வழுக்கி விழுந்தார். இதில் மயங்கம் அடைந்தார்.. உடனே அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பாதி வழியிலேயே உயிர் இழந்துள்ளார். இதனால் திரையுலகத்தினர் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்தடுத்து இரண்டு நடிகர்கள் இறந்தது தமிழ்திரையுலகினரை வருத்தத்தில் ஆழ்த்தி இருக்கிறது.