அசுரன் நடிகை மஞ்சு வாரியர் போலீசில் புகார்.. இயக்குனர் ஸ்ரீகுமாருக்கு சம்மன்...
By Chandru
நடிகர் திலீப்பை விவகாரத்து செய்து பிரிந்தார் மஞ்சு வாரியர். விவகாரத்துக்கு பிறகு நடிப்பிலிருந்து விலகியிருந்தார். மீண்டும் நடிக்க ஆசைப்பட்டபோது ஒடியன் மலையாள படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தார் இயக்குனர் ஸ்ரீ குமார் மேனன்.
சில ஆண்டுகள் கடந்த நிலையில் இயக்குநர் ஸ்ரீ குமார் மேனனால், தன்னுடைய உயிருக்கே ஆபத்து என்று கேரள போலீஸ் உயர் அதிகாரி, லோக்நாத் பெஹராவிடம் புகார் அளித்தார் மஞ்சு வாரியர். அதற்கான ஆவணங்களையும் அவர் சமர்ப்பித்தார்.
மஞ்சு வாரியரின் புகாரை, ஸ்ரீ குமார் மறுத்தார். மஞ்சு வாரியர் பொய்யான குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். அதை சட்ட ரீதியில் எதிர்கொள்வேன் என்றார்.
இந்நிலையில் , போலீஸ் அதிகாரி லோக்நாத் பெஹ்ரா, மஞ்சு வாரியர் புகாரை விசாரிக்கச் சொல்லி திருச்சூர் கிழக்கு போலீசாருக்கு அனுப்பி வைக்க, அவர்கள் விசாரணையைத் துவங்கி உள்ளனர். முதல் கட்டமாக, விசாரணைக்கு ஸ்ரீ குமாரை அழைத்துள்ளனர். இதற்கான சம்மன் ஸ்ரீ குமாருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
மஞ்சுவாரியர் சமீபத்தில் வேறிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.