விஜய்யுடன் மோதிய கார்த்தி, சூர்யாவுடன் மோதுகிறாரா? ஜோதிகாவும் களத்தில் இறங்குகிறார்...?

தீபாவளியையொட்டி விஜய் நடித்த பிகில் ரீலீஸ் ஆன அதே நாளில் கார்த்தி நடித்த கைதி படமும் ரிலீஸ் ஆனது. இரண்டு  படங்களும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் சூர்யா நடித்த படம் திரைக்கு வரவுள்ள அதே நாளில் கார்த்தி, ஜோதிகா நடித்துள்ள படமும் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் நடித்த 'பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் ஜோதிகா, கார்த்தி அக்கா-தம்பி யாக நடிக்கின்றனர். சத்யராஜ், நிக்கிலா விமல் உள்ளிட்ட பலரும்  நடிக்கின்றனர்.   வியாகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் பேரலெல் மைன்ட்ஸ்  நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு 96 பட புகழ் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய் கிறார். சஸ்பன்ஸ் த்ரில்லர் படமாக  உருவாகியுள்ள இப்படத்தை வரும் டிசம்பர்  20ஆம் தேதி வெளியிட திட்ட மிட்டுள்ளதாக தெரிகிறது .   அதேபோல் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் சூரரை போற்று படமும் டிசம்பர் 20ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக  கூறப்படு கிறது. அண்ணன் சூர்யா நடிக்கும் படம் வெளியாகும் அதே நாளில் தம்பி கார்த்தி நடிக்கும் படம் வெளியாகும் என்ற தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடைசி நேரத்தில் இதில் மாற்றம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறதாம்.
More News >>