வரும் 7ம் தேதி துணை முதல்வர் ஓ.பி எஸ் அமெரிக்கா செல்கிறார்.
கடந்த ஆகஸ்டு மாதம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறைப் பயணமாக இங்கிலாந்து, அமெரிக்கா, அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று திரும்பினார். இந்த நிலையில், துனை முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் அமெரிக்காவுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்கிறார்.
வரும் 7 ஆம் தேதி ஓ பன்னீர் செல்வம் சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டு செல்கிறார். அவருடன் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனும் உடன் செல்கிறார்.
அமெரிக்காவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்கிறார். சிகாகோவில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஓ பன்னீர் செல்வம் பங்கேற்க திட்டமிட்டிருக்கிறார்.