விஜய்யின் தெறி  ரீமேக்கில் சுருதிஹாசன் கிராக் ஆகும் ஹீரோ...

விஜய் நடித்த தெறி படத்தை அட்லி இயக்கினார். 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 16ந்தேதி இந்த படம் வெளியானது. இதில் விஜய் ஜோடியாக சமந்தா மற்றும் எமி ஜாக்சன் நடித்தனர்.

மறைந்த இயக்குனர் மகேந்திரன், ராதிகா சரத்குமார், நான் கடவுள் ராஜேந்திரன், மனோபாலா, அழகம் பெருமாள் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர்.தெறி படம் ரிலீஸ் ஆனபோதே  தெலுங்கிலும் டப்பிங் செய்து  ரிலீஸ் செய்யப்பட்டது.

இருந்தாலும், தெலுங்கில் இப் படத்தை ரீமேக் செய்ய ஏகப்பட்ட போட்டி நிலவியது. விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்கப் போவதாக கூறப்பட்டது. தற்போது அது உறுதியாகியிருக்கிறது.

இப்படத்தில், ஹீரோயினாக சுருதி ஹாசன் நடிக்கிறார். தமிழில் எமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில் சுருதி நடிக்கிறார். இப்படத்துக்கு கிராக் என பெயர் வைக்க பேசப்பட்டு வருகிறது.

More News >>