ஜீவாவின் பயணங்கள் படம் ஜிப்ஸிக்கு தணிக்கையில் ஏ சான்று... அரசியல் பிரமுகர்களும் நடித்துள்ளனர்..

நடிகர் ஜீவா ஹீரோவாக நடிக்கும் படம் ஜிப்ஸி. குக்கூ, ஜோக்கர் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் இயக்கியிருக்கிறார். நடாஷா ஹீரோயின்.

இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் பயணங்களை பற்றி பேசும் கதையாக ஜிப்ஸி உருவாகியிருக்கிறது. இந்த படத்திற்கு தணிக்கையில் ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்ககிறது.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இந்த படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெறுகிறது.  ஒரு பாடல் காட்சியில் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு மற்றும் சமூக ஆர்வலர்களான பியூஸ் மானுஷ், திருமுருகன் காந்தி நடித்துள்ளனர்.

More News >>