பிரகாஷ்ராஜ் நடிக்க வாழ்நாள் தடை கேட்டு பிலிம்சேம்பரில் புகார்.. இல்லாவிட்டால் போராட்டம் என மிரட்டல்..
வில்லன், குணசித்ர நடிகர் பிரகாஷ்ராஜ், சமீபகாலமாக அரசியலிலும் கவனம் செலுத்துகிறார். பா.ஜவினரின் செல்பாடுகள் பற்றியும், பிரதமரின் செயல்பாடுகள் பற்றியும் அவ்வப்போது விமர்சிக்கிறார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரகாஷ்ராஜ் ராமாயணம் பற்றி தவறாக பேசியதாக இந்து அமைப்பினர் பிரகாஷ்ராஜை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் கன்னட பிலிம்சேம்பரில் பிரகாஷ்ராஜ் மீது இந்து மத அமைப்பு ஒன்று புகார் அளித்திருக்கிறது.
ராமாயணம் பற்றி தவறாக பேசி மத உணர்வை புண்படுத்தியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். அவர் கன்னட படத்தில் நடிப்பதற்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும். இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் கன்னட பிலிம் சேம்பர் முன்பாக போராட்டம நடத்தப்படும் என மிரட்டலும் விடுக்கப்பட்டிருக்கிறது.