8 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த பாரதிராஜா-இளையராஜா... தேனியில் இணைந்த இயல் இசை...
16 வயதினிலே தொடங்கி பல்வேறு படங்களில் மறக்க முடியாத பாடல்களை வழங்கிய ஜோடி இளையராஜா - பாரதிராஜா. இவர்கள் இருவரும் கருத்துவேறுபாடு காரணமாக நீண்ட நாட்களாக பேசாமல் இருந்தனர்.
8 ஆண்டுகளுக்கு பின்னர் இருவரும் சந்தித்து கொண்டனர். தேனியில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இளையராஜாவுடன் காரில் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் இயக்குனர் பாரதிராஜா.
இதுபற்றி பாரதிராஜா டுவிட்டரில், ”பல ஆண்டுகளுக்கு பிறகு இரு இதயங்கள் இணைந்தன. இயலும், இசையும் இணைந்தது; இதயம் என் இதயத்தை தொட்டது என் தேனியில்” என குறிப்பிட்டுள்ளார்.