ராஜ்கிரணுடன் மீண்டும் இணைந்த மீனா...இருமொழி படத்தில் மமூட்டியும் கைகோர்பு..  

திரைப்படங்களில் ஒரு சில ஜோடிகள் நிரந்தரமாக ரசிகர்கள் மனங்களில் பதிந்துவிடுகின்றன. அப்படி பதிந்த ஜோடிகளில் ராஜ்கிரண், மீனாவும் ஒன்று. மாயாண்டி, சோலையம்மாக நடிக்க 1991ம் ஆண்டு திரைக்கு வந்த என் ராசாவின் மனசிலே படத்தில் இணைந்த ராஜ்கிரண், மீனா அடுத்து பாசமுள்ளபாண்டியரே படத்தில் இணைந்தனர். அதன்பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு குபேரன் படத்தில் இணைந்திருக்கின்றனர். தமிழ், மலையாளம் இருமொழியில் உருவாகும் இப்படத்தில் மம்மூட்டியும் இணைகிறார்.  . இவர்களுடன் கலாபவன் ஷாவன், ஜான் விஜய், அர்த்தனா பினு, ஜெயப்பிரகாஷ், மாரிமுத்து, சித்திக் ஆகியோரும் இதில் நடிகின்றனர். அஜய் வாசுதேவ் இயக்குகிறார்.   படம் பற்றி அவர் கூறும்போது,'மம்மூட்டி, ராஜ்கிரண், மீனா குபேரன் படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கம்படி இருக்கும். பிபின் மோகன், அனீஸ் ஹமீது கதை எழுதுகின்றனர். ராஜ்கிரண் வசனம் எழுதுவதுடன் முதன்முறையாக பாடலும் எழுதி உள்ளார். கவிஞர் விவேகாவும் பாடல் எழுதுகிறார். கோபிசுந்தர் இசை, ரணதீவ் ஒளிப்பதிவு, ஜோபி ஜார்ஜ் தயாரிக்கிறார். டிசம்பரில் படம் ரிலீஸ்' என்றார் இயக்குனர் அஜய் வாசுதேவ். குபேரன் படத்தின் தமிழ்நாடு உரிமையை ராஜ்கிரணின் ரெட் சன் ஆர்ட் கிரேஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் ராசாவே உன்னை நம்பி, என்ன பெத்த ராசா, என் ராசாவின் மனசிலே, அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் ஆகிய வெள்ளி விழா படங்களையும், நூறு நாட்கள் படங்களையும் தயாரித்து வெளியிட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
More News >>