அஜீத்துக்கு நஸ்ரியா ஜோடியா? மறுபடியும் ஒரு விளக்கம்...
அஜீத் நடிக்கும் புதிய படம் வலிமை. எச்.வினோத் இயக்குகிறார். இவர் ஏற்கனவே அஜீத் நடித்த நேர்கொண்ட பார்வை இயக்கியவர். போனிகபூர் தயாரிக்கிறார்.
வலிமை படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நஸ்ரியா நடிக்க உள்ளதாக தகவல் பரவியது. கடந்த வாரமே இந்த தகவலை நஸ்ரியா மறுத்திருந்தார் ஆனாலும் கிசுகிசு ஓயவில்லை. தற்போது நஸ்ரியா மீண்டும் டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
'ஹலோ ஃபிரண்ட்ஸ் உங்களிடம் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். வலிமை படத்தில் நான் நடிப்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதியாகவில்லை. அதுவெறும் வதந்தி. தயவு செய்து பொய்யான தகவலிலிருந்து விலகி இருங்கள். அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை காத்திருங்கள்' என குறிப்பிட்டிருக்கிறார் நஸ்ரியா. இவ்வளவு தூரம் மறுத்திருந்தாலும் அஜீத்தின் வலிமை படத்தை புரமோஷன் செய்வதிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. அஜீத்தின் தீவிர ரசிகையாக அவர் தனது கடமையை செய்கிறாராம்.