ஆசியான், பொருளாதார மாநாட்டில் பங்கேற்க தாய்லாந்து புறப்பட்டார் மோடி... ”தாய்” மொழியில் திருகுறள் நூல் வெளியிடுகிறார்..
By Chandru
பதினாறாவது ஆசியான்-இந்தியா மாநாடு, 14-ஆவது கிழக்கு ஆசிய மாநாடு, 3-ஆவது பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு ஆகியவற்றில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் அரசு முறைப் பயணமாக தாய்லாந்துக்கு இன்று (சனிக்கிழமை) புறப்பட்டுச் சென்றார்.
ஆசியான் அமைப்பைச் சோ்ந்த புரூனே, கம்போடியா, இந்தோனேஷியா, மலேசியா, மியான்மா், சிங்கப்பூா், தாய்லாந்து, பிலிப்பின்ஸ், லாவோஸ், வியத்நாம் ஆகிய 10 நாடுகள், அவற்றின் 6 வா்த்தகக் கூட்டாளிகளான இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகியவற்றுக்கு இடையே பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு என்ற பெயரில் தடையற்ற வா்த்தகம் மேற்கொள் வதற்காக முன்மொழியப்பட்டுள்ளது.
தாய்லாந்து பயணத்தின்போது பாங்காக் தேசிய உள்விளையாட்டு அரங்கில் இந்தியர்கள் பங்கேற்கும் கூட்டம் ஒன்றில் பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார்.
மேலும் குருநானக்கின் 550-வது பிறந்தநாள் நினைவாக சிறப்பு நாணயம் ஒன்றை பிரதமர் மோடி வெளியிடுகிறார். அத்துடன் தாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலையும் பிரதமர் வெளியிடுகிறார்.