முதல் படத்திலேயே நடிகைக்கு லிப் கிஸ் தந்த அனுபவம்.. நடிகர் துருவ் விக்ரம் லக லக பதில்...
By Chandru
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் தெலுங்கில் நடித்த அர்ஜூன்ரெட்டி, தமிழில் ஆதித்ய வர்மா பெயரில் உருவாகியிருக்கிறது. கிரீசயா இயக்கி உள்ளார். துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார். பனிதா சந்து ஹீரோயின். இப்படத்தில் நடித்ததுபற்றி துருவ் விக்ரம் கூறியதாவது: இப்படம் ஏற்கனவே ஒருமுறை தமிழில் எடுக்கப்பட்டது தெரிந்திருக்கும். அது வெளியாகவில்லை.
அதேபடம் தற்போது கிரீசியா இயக்கத்தில் படமாகியிருக்கிறது. என் அப்பா விக்ரம் போல் நடிகனாகவேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருந்தது. அந்த வாய்ப்பை ஆதித்யா வர்மா மூலம் அப்பாவே ஏற்படுத்தி தந்தார். இது காதலை அழுத்தமாக சொல்லும் கதை. தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்து உருவாகியிருக்கிறது.
எனக்கு முதல்பட மாக நடிக்க இதனை தேர்வு செய்துதந்தது எனது அப்பாதான். இப்படத்தில் பனிதா சந்து, பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஹீரோயினுடன் லிப் டு லிப் காட்சியில் நடிக்கும்போது எப்படி இருந்தது என்கிறார்கள். அதுவும் ஒரு திரைப்பட காட்சி அவ்வளவுதான். சண்டை காட்சியில் நடிப்பது போலத்தான் இதுவும் ஒரு காட்சி. எனது தந்தை நடித்த படத்தை எந்த படம் ரீமேக் செய்தால் நீங்கள் நடிப்பீர்கள் என்கிறார்கள்.
அவர் நடித்த பீமா படத்தை ரீமேக் செய்தால் அதில் நடிப்பேன். அதற்கு காரணம் அந்த படத்துக்காக என் அப்பா 3 வருடம் காத்திருந்த நடித்துக்கொடுத்தார். படம் பெரிய அளவில் வெற்றி பெறாவிட்டாலும் அப்படத்துக்காக அவர் உழைத்தது இன்னும் என் கண்ணுக்குள் நிற்கிறது. இப்போதுள்ள டிரெண்டுக்கு பீமா படம் பொருத்தமாக இருக்கும் வரவேற்பை பெறும்.
இவ்வாறு துருவ் விக்ரம் கூறினார்..