ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு
தாய்லாந்து நாட்டிற்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பாங்காக்கில் இன்று ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயை சந்தித்து பேசினார்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் 16-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். இந்தியாவுக்கும், ஆசியான் அமைப்புக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து அவர் பேசினார்.
இந்நிலையில், பாங்காக்கில் இன்று காலை ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபேயை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடைேயயான வர்த்தக, கலாசார உறவுகள் குறித்து பேசினார்.