கமல்ஹாசன் மரபணு மாற்றப்பட்ட விதை ஒரு பயனும் இல்லை - அமைச்சர் ஜெயக்குமார் அதிரடி
கமல்ஹாசன் மரபணு மாற்றப்பட்ட விதை, அதனால் யாருக்கும் பயன் இல்லை என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறிப்பாக ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆளும் அதிமுக அரசை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் தான் தனிக்கட்சி தொடங்குவதாக கமல்ஹாசன் சமீபத்தில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக இன்று மாலை மதுரையில் நடைபெறவுள்ள பொது கூட்டத்தில், நடிகர் கமலஹாசன் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கை குறித்த அறிவிப்பை வெளியிடுகிறார்.
இதுகுறித்து சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "மீனவர்களை நடத்தும் விதத்திலேயே தெரிகிறது. கமலுக்கு தலைமை பண்பு இல்லை; நிர்வாகத் திறனும் இல்லை. காலை 7.30 மணிக்கு பள்ளிக் கூடத்துக்கு சென்ற ஒரே நபர் கமல்தான்.
பள்ளியில் இருந்து அரசியலை தொடங்கக் கூடாது. மக்களை சந்தித்து தொடங்க வேண்டும். பள்ளி என்பது அரசியல் தொடங்குவதற்கான இடம் இல்லை. அரசியல் பிரவேசம் செய்யும் கமல், ரஜினி போன்றோர் காதிதப்பூக்கள் என்று கூறியிருந்தார்.
அந்த கருத்துக்கு நான் உடன்படுகிறேன். காகிதப்பூவல்ல, விதையாக உருவெடுப்பேன் என்று கமல் கூறியுள்ளது, அவர் மரபணு மாற்றப்பட்ட விதை, அதனால் யாருக்கும் பயன் இல்லை. மேலும் அந்த விதையை நாம் இதுவரை தமிழகத்தில் விதைத்ததில்லை" என்றார்.