தனுஷ் ஜோடி ரஜினி ஜோடியாகிறார்...? டைரக்டர் சிவா சீக்ரெட் விசிட்டால் பரபரப்பு..
By Chandru
இயக்குனர் சிவா தமிழ் சினிமாவில் சிறுத்தை, தல அஜித் நடித்த வீரம், வேதாளம், விஸ்வாசம் மெகா ஹிட் படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா.
அடுத்து சூப்பர்ஸ்டார் நடிக்கும் 168வது படத்தை இயக்குகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவா சமீபத்தில் கேரளா சென்றிருக்கிறார். நடிகை மஞ்சு வாரியரை ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வைப்பதற்காக அவரிடம் பேசுவதற்குத்தான் சிவா சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
மஞ்சுவாரியர் நடிக்க ஒப்புகொண்டால் தனுஷின் அசுரன் படத்துக்கு பிறகு மஞ்சு நடிக்கும் 2வது தமிழ் படமாக இது இருக்கும்.