என்னடா இது விஜய் படத்துக்கு வந்த சோதனை. விஜய் 64 அப்டேட்: காற்றுமாசுவால் சூட்டிங் இடையூறு..
கார்த்தி நடித்து திரைக்கு வந்த கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒரே ஜம்ப்பாக விஜய் படத்துக்கு தாவி இருக்கிறார். விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை இயக்குகிறார்.
அனிருத் இசையமைக்கும் இப்படம் வரும் 2020-ஆம் ஆண்டு திரைக்கு வரவுள்ளது.. எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிக்க உள்ளது.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது 2ம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் காற்று மாசு காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அளவை விட காற்று மாசு அதிகமாக இருப்பதால் டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே காற்று மாசால் தளபதி64 படப்பிடிப்பும் தாமதமாகி வருவதாக தகவல்கள் வ்ருகின்றன. மாசு குறைந்தவுடன் படப்பிடிப்பு வேளைக்ள் மும்முரமாக நடக்கும் என தெரிகிறது.