விஷாலுக்கு புது ஜோடி கண்டுபிடித்த மிஷ்கின்...மதுராவிலிருந்து வரும் லவ்லி சிங்...
By Chandru
மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இப்படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. முதல் பாகத்தில் விஷால் ஜோடியாக அனு இமானுவேல் நடித்திருந்தார்.
அதில் அவர் கொல்லப்படுவார். இதையடுத்து 2ம் பாகத்துக்கு புது ஹீரோயின் தேவைப் பட்டார். அதற்கானா தேடுதல் வேட்டை யில் புதுமுக நடிகை தேர்வாகியிருக்கிறார்.முன்னதாக இந்த பாத்திரத்துக்கு பிரவல் ஹீரோயினை நடிக்க வைப்பதா என்று ஆலோசிக்கப்பட்டது. புது நடிகையாக இருந்தால் பொருத்தமாக இருக்கும் என்று படக்குழு முடிவு செய்யப்பட்டது. இதற்கான் ஆடிஷன் நடந்தது. நிறைய பெண்கள் கலந்து கொண்டனர்.
இதில்,மதுராவைச் சேர்ந்த லவ்லி சிங் ஹீரோயினாக தேர்வானார். இவர் இந்தியில் ஒருசில படங்களில் நடித் துள்ளார்.
குணச்சித்திர வேடத்தில் ரகுமான், கவுதமி நடிக்கின்றனர். பிரசன்னாவும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்க வுள்ளது. 45 நாட்கள் தொடர்ச்சியாக லண்டனில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.