சூப்பர் ஹீராயினாகும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன்.. ஹாலிவுட் பாணி கதையில் நடிக்கிறார்..
By Chandru
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் இந்தியில் நடித்து வருகிறார். தமிழிலும் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
தற்போது அவருக்கு சூப்பர் ஹீரோயி னாகும் ஆசை வந்திருக்கிறது. சன்னி லியோன் என்ன ஆசைப்பட்டாலும் அதை நிறைவேற்றி வைப்பவர் அவரது கணவர் டேனியில் வெப்பர். இரவு பகலாக சன்னியும் டேனியலும் ஒன்றாக அமர்ந்து சூப்பர் ஹீரோயின் கதையை உருவாக்கிவிட்டனர்.
இதுபற்றி சன்னி லியோன் கூறும்போது, , 'சூப்பர் ஹீரோ கதையை நானும் எனது கணவர் டேனியல் வெப்பரும் இணைந்து உருவாக்கினோம். அந்த வகையில் கோர் கதாபாத்திரம் தீய சக்திகளை அழிக்க வருகிறது' என்றார்.
தீய சக்திகளிடமிருந்து உலகைக் காக்கும் 'கோர்' என்ற சூப்பர் ஹீரோ கேரக்டராக அவதாரம் எடுத்துள்ள அவர், அந்தக் கதாபாத்திரத்துக்கான அறிமுக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கோர் இந்த கிரகத்தை சேர்ந்தவள் இல்லை. ஆனாலும் தீய சக்திகளிடமிருந்து உலகைக் காக்க தயாராக இருக்கிறாள் தெரிவித்துள்ளார்.