முறுக்கு மீசையுடன் விஜய் ஸ்டில் வைரல்.. டெல்லியை கலக்கும் தாதாக்கள் கதை..?
மாநகரம், கைதி என வித்தியாசமான படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இது கேங்ஸ்டர் கதையாக இருக்கும் எனப்படுகிறது. விஜய்யும், விஜய்சேதுபதி தாதாவாக நடிக்கிறாரகள்.
அக்ஷன் கதையென்றாலே விஜய்க்கு செம தீனியாகா இருக்கும் இப்படம் ஆக்ஷன் இயக்குனர் லோகேஷ் கைக்கு சென்றிருப்பதால் சண்டை காட்சிகள் இதுவரை இல்லாத அளவுக்கு தெறிக்க விடுவதாக இருக்குமாம்.
இப்படத்தின் முரட்டுத்தனமான கதாப்பாத்திரத்துக்கு ஏற்ப முறுக்கு மீசை வைத்து நடிக்கிறார் விஜய். அவரது டெல்லி ஷூட்டிங் படமொன்று நெட்டில் வெளியாகி வைரலானது.