3 முக்கிய நடிகர்களுக்காக காத்திருக்கும் ஜெயலலிதா வாழ்க்கைப் படம்... தி அயர்ன் லேடி பட ஷூட்டிங் எப்போது?

மறைந்த முதல்வர் ஜெயலாலிதா வாழ்க்கை வரலாறு படம் தன் அனுமதியில்லாமல் எடுக்கக்கூடாது என்று ஜெ தீபா வழக்கு தொடர்ந்திருக்கிறார்.  அதேசமயம் இந்நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம் உருவாக்குவதற்கான வேலைகள் ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்கிறது.

ஜெயலலிதா வாழ்க்கையை தி அயர்ன் லேடி என்ற பெயரில் படமாக்குவதாக இயக்குனர் பிரியதர்ஷினி தெரிவித்திருந்தார். இதில் ஜெயலலிதா வேடத்தில் நித்யா மேனன் நடிக்கிறார். ஆனாலும் படப்பிடிப்பை இன்னும் தொடங்க வில்லை. தாமதத்துக்கான காரணம் பற்றி பிரியதர்ஷினி கூறியாதாவது:

“தி அயர்ன் லேடி படம் ஜெயலலிதாவின் முழு வாழ்க்கை கதையையும் உள்ளடக்கியது. ஜெயலலிதாவைப் போலவே முக அமைப்பு முதல் நிகரில்லா ஆளுமை திறன் வரை இயற்கையாகவே அவரது பண்புகளை நித்யாமேனன் கொண்டு இருப்பதால் ஜெயலலிதா வேடத்துக்கு சரியாக இருக்கிறார் என்று தேர்வு செய்தேன்.

வாழ்க்கை வரலாற்றை படமாக்குவது சவாலான விஷயம். அதிக சிக்கல்கள், சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்கள் இருந்தாலும் அதன் நிஜ தன்மையில் இருந்து மாறாமல் படமாக்க முயன்று கொண்டு இருக்கிறேன்.

சர் ரிச்சர்ட் அட்டன்பரோ காந்தி வாழ்க்கை வரலாற்றை வடிவமைக்க 18 ஆண்டுகள் செலவிட்டார். ஒரு வாழ்க்கை வரலாற்று படம் சிறந்த படைப்பாக அமைய சரியான கால அவகாசம் தேவைப்படுகிறது. படத்தில் உள்ள மூன்று முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க இருக்கும் நடிகர்கள் தேதிகளுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

More News >>