வக்பு வாரிய இடங்களில் அயோத்தி நிகழ்வுகளுக்கு தடை..
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், அது தொடர்பான கூட்டங்கள், போராட்டங்கள் எதையும் வக்பு வாரிய இடங்களில் நடத்தக் கூடாது என்று ஷியா வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி கூறியுள்ளார்.
ஷியா வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி வௌியிட்ட அறிவிப்பில், அயோத்தி நில வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வெளியாக உள்ள நேரத்தில், அயோத்தி தொடர்பான கூட்டங்கள், போராட்டங்கள் எதையும் ஷியா வக்பு வாரிய இடங்களில் நடத்தக் கூடாது.
வக்பு வாரியத்தின் கீழ் வரும் மசூதிகள், தர்காக்கள் உள்ளிட்டவை மத நிகழ்வுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். இதை முத்தவல்லிகள் உறுதி செய்ய வேண்டும். பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலோ, வேறு நிகழ்வுகளுக்கோ இடமளிக்கப்பட்டால் வக்பு வாரியச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.