பிகில், கைதியுடன் மோதலை தவிர்த்த சங்கத்தமிழன், ஆக்ஷன் உடன் மோதல்.. விஷால் விஜய்சேதுபதி பலப்பரீட்சை..
தீபாவளியையொட்டி வெளியான விஜய்யின் பிகில், கார்த்தியின் கைதி பட ரிலீஸ் தினத்தன்றே விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் படமும் ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் மோதலை தவிர்த்து நவம்பர் 15ம் தேதிக்கு சங்கத்தமிழன் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
அதன்படி வரும் 15ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் நடித்துள்ள ஆக்ஷன் படமும் நவம்பர் 15ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சங்கத்தமிழன் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி. விஜய் சந்தர் டைரக்டு செய்திருக்கிறார். ராசி கண்ணா, நிவேதா பெதுராஜ் ஹீரோயினாக நடிக்கின்றனர்.
விஷால் நடிக்கும் ஆக்ஷன் படத்தில் தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி ஹீரோயின்களாக நடித்திருக்கின்றனர்.
விஷாலின் ஆக்ஷன், விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படங்களின் மோதல் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரே நாளில்மோதிக்கொள் கிறது என்பது குறிப்பிடத்தக்கது.