விஜய்யின் செல்பி புள்ள பாடல். பஞ்ச் வசனம் கேட்டு நடக்கும், பேசும் சிறுவன்.. கேரளாவில் பரபரப்பு...
By Chandru
செய்தியின் தலைப்பை பார்த்தும் ஏதோ பிரசங்கத்தில் நடக்கும் அதிசயம்போலத்தான் இருக்கிறது. ஆனால் நெட்டில் இந்த செய்தி படம் மற்றம் வீடியோவுடன் வெளியாகி யிருப்பதை பார்க்கும்போது நம்பாமல் இருக்க முடியவில்லை.
கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் செபாஸ்டின். பிறந்தது முதலே நடக்க முடியாமல் முடங்கிக்கிடக்கிறார். பேச்சும் வரவில்லை. பல டாக்டர்களிடம் சிகிச்சை மேற்கொண்டனர். சரியான பலன் அளிக்க வில்லை. ஒரு நாள் செபாஸ்டின் அருகில் இருந்த செல்போனில் தளபதி விஜய்யின் கத்தி படத்தில் இடம்பெற்ற செல்பி புள்ள பாடல் ரிங்டோன் ஒலித்தது.
அதைக்கேட்டு சிறுவனின் உடலில் அசைவு தெரிந்தது. அதை அவரது பெற்றோர் கவனித்தனர். பின்னர் தொடர்ந்து அந்த பாடலை கேட்க வைப்ப துடன் விஜய் படத்திலிருந்து பஞ்ச் வசனங் களும்சிறுவனுக்கு காட்டப்பட்டு வருகிறது. அதைப்பார்த்து நடக்கவும், மெதுவாக பேசவும் தொடங்கியிருக்கிறாராம் செபாஸ்டின்.
இதுபற்றி அறிந்த டாக்டர்கள் இசைதெரபி மூலம் நோய்யை குணப்படுத்த முடியும் என்பதை ஒப்புக்கொண்டு வருகிறார்களாம். விஜய் பாடல் கேட்டு பிறவியிலேயே நடக்காத, பேச முடியாத சிறுவன் நடக்கவும் பேசவும் செய்கிறார் என்ற தகவல் வெளியானதும் அதை விஜய் ரசிகர்கள் கண்டு ஆனந்தத்தில் நெட்டில் அந்த தகவலை வைரலாக பரப்பிக்கொண்டிருக்கின்றனர்.