உத்தரபிரதேச மாநில முதல்வர் அலுவலக வளாகத்தில் சிறுமி பலி

உத்தரபிரதேச மாநில முதல்வர் அலுவலக வளாகத்தில் இரும்பு கேட் விழுந்ததில் சிறுமி நசுங்கி பலியானார்.

லக்னோவில் உள்ள லோக்பவன் கட்டடம்தான் உத்தரபிரதேச மாசில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம். இங்கு, பராமத்துப் பணிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. கட்டடட பராமத்துப்பணிகளில் ஈடுபட்ட அமிதா என்ற பெண் அருகிலேயே தங்கியிருந்தார். இவரது, 9 வயது மகள் கிரண், இன்று அலுவலகத்தில் இருந்த இரும்பு கேட் ஒன்றில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தார்.

காலையில் அங்கு பலத்த மழை பெய்த நிலையில் இத்துப் போய் இருந்த இரும்பு கேட் கிரண் மீது விழுந்தது. இதில் கிரண் பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனளிக்காமல் இறந்து போனார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

More News >>