விஜய் 64ல் 3 வில்லன்கள்...பட்டியலில் இணைந்த சாந்தனு..

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் நடக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இதில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார் என்ற தகவல் வெளியானத்திலிருந்து படம் பற்றிய பரபரப்பு அதிகரித்தது. இந்நிலையில் இப்படத்தில் மேலும் 2 பேர் வில்லன்களாக நடிக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இளம் நடிகர் சாந்தனுவும், ஆண்டனி வர்கிஸும் இணை வில்லன்களாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

சாந்தனு விஜய்யின் தீவிர ரசிகர். அபவர் இப்படத்தில் நடிக்கிறார் என்று முதலில் தகவல் வந்தபோது விஜய்யின் நண்பராக அல்லது தம்பியாக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் அதை ரசிகர்கள் அதிர்ச்சியுடன் பார்த்து வருகின்றனர்.

More News >>