விக்ரம் வேதா பட இந்தி ஸ்கிரிப்ட்டில் பிரபல நடிகர் அதிருப்தி... ஹீரோ கேட்டதையடுத்து மாற்றம் செய்ய இயக்குனர் ஒப்புதல்...
கடந்த 2017ஆம் ஆண்டு மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் திரைக்கு வந்த படம் விக்ரம் வேதா. புஷ்கர் காயத்ரி இயக்கி இருந்தனர். இப்படம் வரவேற்பை பெற்றதை யடுத்து இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்தனர்.
மாதவன் கதாபாத்திரத்தில் அவரையே நடிக்க கேட்டபோது ஒரே கதாபாத்திரத்தில் இரண்டுமுறை நடிக்க இஷ்டமில்லை என மறுத்துவிட்டார். இதையடுத்த ஷாருக்கான் உள்ளிட்ட சில நடிகர்களை அணுகினர். இறுதியாக அமீர்கான், விஜய்சேதுபதி கேரக்டரிலும், சயிப் அலிகான், மாதவன் கேரக்டரிலும் நடிக்கவிருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் பட ஸ்கிரிப்ட்டில் சில மாற்றங்கள் செய்யப்படுகிறது. 'விக்ரம் வேதா' இந்தி ஸ்கிரிப்டை படித்து பார்த்த அமீர்கான், பல்வேறு திருத்தங்கள் கூறினாராம். தற்போது அந்த திருத்தங்களை செய்யும் பணியில் புஷ்கர் காயத்ரி ஈடுபட்டிருக்கின்றனர்.
அதற்கான பணிகள் நடந்து முடிந்து ஆமிர்கானிடம் ஒப்புதல் பெற்றபிறகு இன்னும் ஒருசில மாதங்களில் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டிருக்கின்றனர்.