தளபதி 64 பற்றி மாளவிகா மோகனன் அப்டேட்...2ம் கட்ட படப்பிடிப்பில் பங்கேற்ற டெல்லிக்கு ஜூட்...
By Chandru
பிகில் படத்திற்கு பிறகு விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.
இதில் விஜய்க்கு ஜோடியாக பேட்ட படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உடன் மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு தற்போது டெல்லியில் நடைபெற்று வருகிறது. அங்கு காற்று மாசு காரணமாக படப்பிடிப்புக்கு இடையூறு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. விஜய், மாளவிகா மோகனன் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படவிருக்கிறது.
இதுபற்றி மாளவிகா தனது ட்விட்டரில் "வணக்கம் டெல்லி! மீண்டும் படப்பிடிப்பு, தளபதி 64 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை இன்று துவங்குகிறேன் உங்கள் அனைவரது அன்பும் தேவை!" என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் மாளவிகா.