இந்துஜாவை மணக்க துடிக்கும் 2 நடிகைகள்... இது என்ன கூத்து ரசிகர்கள் கிண்டல்...
By Chandru
மேயாத மான், மெர்குரி, மகாமுனி போன்ற படங்களில் நடித்திருக்கும் இந்துஜா சமீபத்தில் திரைக்கு வந்த விஜய்யின் பிகில் படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருக்கிறார். சில தினங்களுக்கு முன் விதவிதமான காஸ்டியும் அணிந்து புதிய போட்டோ ஷூட் படங்களை நெட்டில் வெளியிட்டார்.
இந்துஜாவின் புகைப்படத்தை பார்த்த நடிகை மகிமா நம்பியார், 'நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாமா?' என மெசேஜ் அனுப்ப அதற்கு பதில் அளித்த இந்துஜா, 'திருமணம் செய்ய நான் ரெடி' என்று பதில் அளித்தார்.
இவர்களுக்கு இடையே புகுந்த நடிகை அதுல்யா ரவி இந்துஜாவை திருமணம் செய்ய காத்திருப்பதாக பதிவிட்டிருக்கிறார். இவர்களின் பதில்களைப் பார்த்த ரசிகர்கள் இது என்ன கூத்து என நய்யாண்டி செய்துள்ளனர்.