ldquoவிடிவி - 2ல் யார் ஹீரோ தெரியுமா? அதிர்ச்சி கொடுத்த கவுதம் மேனன்
விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்பு நடிக்கவில்லை என்று கவுதம் வாசுதேவ் மேனன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, நடிகை திரிஷா நடித்து வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. காதல் காவியமாக உருவான இந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதனால், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கவுதம மேனன் முடிவு செய்திருந்தார்.
இந்நிலையில், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்பு நடிக்க மாட்டார் என்று கவுதம் மேனன் கூறியிருக்கிறார். மேலும், விடிவி 2வில் நடிகர் மாதவன் நடிக்க தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மாற்றத்திற்கு காரணம், அச்சம் என்பது மடமையடா படத்தின்போது சிம்புவிற்கும் கவுதம் மேனனிற்கும் ஏற்பட்ட மனகசப்பு தான் காரணம் எனவும் கூறப்படுகிறது. மின்னலே படத்திற்கு பிறகு மாதவனும், கவுதம் மேனனும் விடிவி 2வில் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புனித் ராஜ்குமார் மற்றும் டொவினோ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இதன் படப்பிடித்து விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.