கட்சியின் பெயர், கொடியை அறிமுகம் செய்துவைத்தார் கமல் ஹாசன்

மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நடிகர் கமல் ஹாசன் தனது கட்சியின் பெயர், கொடி, கொள்கைகள் ஆகியவற்றை அறிமுகம் செய்தார்.

இந்தக் கூட்டத்திற்கு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சோம்நாத் பாரதி, பி.ஆர்.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

“மக்கள் நீதி மய்யம்” என்று கட்சியின் பெயரை கமல் அறிமுகம் செய்தார். கட்சிக் கொடியையும் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், “மக்கள் நீதி மய்யம்” மக்களுக்கான கட்சி, நான் உங்கள் கருவி. உங்கள் தலைவன் அல்ல. இனி நமக்கு நிறைய கடமை இருக்கிறது. இது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல. நாம் சமைக்க இருக்கும் மக்கள் ஆட்சியின் ஒரு பருக்கை சோற்றை உதாரணமாக்கி இருக்கிறேன்.

இந்த சோற்றுப்பருக்கையை தொட்டுப் பார்க்க நினைப்பவர்கள் தொட்டுப்பாருங்கள். இந்த சோற்று பருக்கையை தொட்டு பார்த்தால் ஊழலில் தோய்ந்த உங்களின் கை விரல் சுடும்.” என்றார்.

More News >>