இந்த படத்தில் நித்யா மேனன் மட்டுமே..
நடிகை நித்யா மேனன் மட்டுமே நடித்துள்ள படம் ஒன்று தயாராகி வருகிறது.சினிமா உலகில் பல வித்தியாசமாக கதைகளங்களில் தயாரிக்கப்படுகிறது.
அல்லது, கமல் ஹாசன் நடித்த வசனமே இல்லாத பேசும் படம் போன்று புதிய முயற்சிகளிலும் இயக்குனர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், ஒரே ஒரு கதாப்பாத்திரம் நடித்துள்ள படம் ஒன்று தயாராகி வருகிறது. அதாவது, துணை கதாப்பாத்திரங்கள் இன்றி நடிகை நித்யா மேனன் மட்டுமே நடித்துள்ள படம். இந்த படத்தின பெயர் ‘பிரன்னா’.
இந்தப் படத்தை வி.கே.பிரகாஷ் இயக்குகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும், பல மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்கு ரசூல் பூக்குட்டி சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிகிறார்.