விமானப்படையின் முதல் பெண் விமானி ஆனார் அவானி சதுர்வேதி

புதுடெல்லி: இந்திய விமானப் படையின் முதல் பெண் விமானியாக அவானி சதுர்வேதி பொறுப்பேற்றதை அடுத்து தனியாக போர் விமானத்தை ஓட்டி சென்றார்.

இந்திய ராணுவ விமானப் படையில் இதுவரை பெண்கள் யாரும் விமானிகளாக தேர்ந்தெடுத்தது இல்லை. இந்நிலையில், விமானப் படை விமானிகளாக பெண்களையும் சேர்க்கலாம் என முதல் முறையாக பாதுகாப்பு துறை முடிவு செய்தது.

அதன்படி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் விமானப்படை போர் விமானிகளாக பாவனா காந்த், மோகனா சிங், அவானி சதுர்வேதி ஆகிய மூன்று பெண்களை தேர்வு செய்தனர்.

விமானப் படையில் பல்வேறு சவால் மிக்க பயிற்சிகளை மேற்கொண்ட இவர்கள், பயிற்சிகளை முடித்த பிறகு ஹைதராபாத்தில் நடந்த விமானப்படையில் பணிக்காக சேர்க்கும் நிகழ்ச்சியில் பெண் விமானிகள் மூன்று பேரும் முறைப்படி போர் விமானிகளாக பொறுப்பேற்றனர்.

இந்திய விமானப்படையின் முதல் பெண் விமானியாக பொறுப்பேற்றுக் கொண்ட அவானி சதுர்வேதி, போர் விமானத்தை தனியார் ஓட்டிச் சென்றார். போர் விமானத்தை தனியாக இயக்கிய முதல் பெண் விமானி என்ற பெருமையை அவானி சதுர்வேதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>