சட்டரீதியான உரிமை வேண்டும் 5 ஏக்கர் நிலம் தேவையில்லை.. தீர்ப்புக்கு ஓவைசி எதிர்ப்பு
எங்களுக்கு சட்டரீதியான உரிமைதான் வேண்டும். 5 ஏக்கர் நிலம் தானம் வேண்டாம் என்று அசாதீன் ஓவைசி கூறியுள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோயில் கட்டுவதற்கும், முஸ்லிம்கள் மசூதி கட்டுவதற்கு வேறொரு பகுதியில் 5 ஏக்கர் நிலத்தை அரசு ஒதுக்கீடு செய்வதற்கும் உத்தரவிட்டு சுப்ரீம் ேகார்ட் பரபரப்பான தீர்ப்பு கூறியுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து, ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதீன் ஓவைசி கூறுகையில், சுப்ரீம் கோர்ட்தான் உயர்ந்தது. ஆனால், அதற்காக அது தவறே செய்யாது என்று சொல்ல முடியாது. நாங்கள் அரசியல்சட்டத்தை முழுமையாக நம்புகிறோம். எங்களுக்கு சட்டரீதியாக உள்ள உரிமைக்காகவே போராடினோம். எங்களுக்கு நீதி வேண்டும். 5 ஏக்கர் நிலம் தானம் எங்களுக்கு தேவையில்லை. அதை நாங்கள் நிராகரிக்க வேண்டும். எங்களுக்கு அந்த சமாதானம் தேவையில்லை என்றார்.