சிறுவனை ஆபாசமாக திட்டிய தனுஷ் பட நடிகை நடவடிக்கைக்கு பயந்து மன்னிப்பு கேட்டார்...

தனுஷ் நடிப்பில் வெளியான அம்பிகாபதி படத்தில் துணை நடிகையாக நடித்தவர் சுவாரா பாஸ்கர். மும்பையில் நடந்த சன் ஆஃப் அபிஷ் எனும் காமெடி டாக் ஷோவில் கலந்து கொண்டார். தனது திரையுலக அனுபவத்தை பகிர்ந்தார்.

அப்போது, நடிக்க ஆரம்பித்த காலத்தில், ஒரு விளம்பரம் பட ஷூட்டிங் தன்னை மிகவும் வருத்தமடைய செய்தது. அந்த சமயத்தில் என்னை பார்த்து 4 வயது பேபி நட்சத்திரம் ஆன்ட்டி என்று கூறினார். அதைக்கேட்டு எனக்குகோபம் வந்துவிட்டது. அவனை ஆபாசமாக திட்டிவிட்டேன் என்று அந்த வார்த்தைகளையும் ஷோவில் கூறினார்.

சுவாரா பாஸ்கரின் இந்த பேச்சு அவரை வம்பில் மாட்டிவிட்டிருக்கிறது. ஆன்ட்டி என்றதற்காக 4 வயது சிறுவனை கெட்ட வார்த்தையாலா திட்டுவது என நெட்டிசன்கள் கண்டித்தனர். மேலும் சுவாரா ஆன்ட்டி எனும் ஹேஷ்டேகை உருவாக்கி அதை இந்தியளவில் டிரெண்ட் செய்துவருகிறார்கள்.

மேலும் சிறுவனை ஆபாசமாக திட்டிய விவகாரம் தொடர்பாக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய ஆணையத்திடம் புகார் கொடுத்து ஸ்வாரா பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியது. இதையடுத்து, 'ஏதோ கோபத்தில் பேசிவிட்டேன். யார் மனதாவது புண்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டும்' தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டிருக்கிறார் ஸ்வாரா.

More News >>