ஹாலிவுட் நடிகைக்கு குரல் கொடுத்த ஸ்ருதி ஹாசன்...டிஷ்னியின், ப்ரோஸன் 2 வரும் 22-ஆம் தேதி ரிலீஸ்...
By Chandru
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆண்டுகளாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி யிருந்தார் ஸ்ருதி ஹாசன். இடைவெளிக்கு பிறகு தற்போது விஜய்சேதுபதியுடன் 'லாபம்' மற்றும் இந்தியில் உருவாகும் 'பவர்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
ஹாலிவு்டில் டிம் கின் இயக்கவுள்ள அமெரிக்க தொலைக் காட்சி தொடர் ஒன்றிலும் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் ஸ்ருதிஹாசன். இந்த தொடரில் ஜெர்மி இர்வின், பிரையன் ஸ்மித், ஒமர் மெட்வால்லி உள்பட முன்னணி அமெரிக்க தொலைக்காட்சி பிரபலங்கள் நடிக்கவுள்ளனர்.
தற்போது ஹாலிவுட்டில் வால்ட் டிஸ்னி தயாரித்திருக்கும் அதிக பொருட் செலவில் ப்ரோஸன் 2 (Frozen II) படம் தயாரித்திருக் கிறது. இந்த படம் தமிழ் பல மொழிகளில் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. பரோஸன் 'படத்தின் முக்கிய கதாபாத்திரம் 'எல்சா'. அந்த கதாபாத்திரத்தில் ஹாலிவுட் நடிகை இடினா மென்ஜெல் நடித்துள்ளார்.
அவர் நடிக்கும் 'எல்சா' கதாபாத்திரத்துக்கு தமிழில் குரல் கொடுத்துள்ளார் ஸ்ருதிஹாசன். இந்த தகவலை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோ இந்தியாவின் சமூக வலைதளத்தில் உறுதி செய்திருக்கிறது.