13 இலக்க செல்போன் எண்களா..?- மறுத்த பி.எஸ்.என்.எல்

செல்போன் பயன்பாட்டில் இருக்கும் 10 இலக்க எண்கள் விரைவில் 13 இலக்க எண்களாக மாற்றப்படும் என்பது தவறானத் தகவல் என பி.எஸ்.என்.எல் மறுப்பு தெரிவித்துள்ளது.

பி.எஸ்.என்.எல் நிறுவனம் தற்போது இந்திய உபயோகத்தில் இருக்கும் 10 இலக்க செல்போன் எண்களை 13 இலக்க எண்களாக மாற்ற உள்ளதாக நேற்று பல ஊடகங்களிலும் தகவல்கள் பரவின.

மேலும், இந்தத் திட்டம் வருகிற ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும் கூடுதல் செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இது முற்றிலும் தவறான செய்தி என்றும் உண்மையான அறிக்கையிலிருந்து செய்தி திரிந்து வெளியாகியுள்ளது என்றும் பி.எஸ்.என்.எல் விளக்கமளித்துள்ளது.

இதன் அடிப்படையில் சிம் கார்டு மூலம் இயங்கும் இயந்திர பயன்பாடு எண்கள்தான் 10 இலக்கத்திலிருந்து 13 இலக்க எண்களாக மாறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, சிம் கார்டு மூலம் இயங்கும் ஸ்வைப்பிங் மிஷின், விற்பனையகங்களில் பயன்படுத்தப்படும் மிஷின், ஸ்மார்ட் ஃபிரிட்ஜ் ஆகியவற்றின் எண்கள்தான் 10 இலக்கத்திலிருந்து 13 இலக்க எண்களாக மாற உள்ளது.

இந்தப் புதிய மாற்றம் வருகிற அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News >>