யோகிபாபுடன் நடித்தபிறகு மீண்டும் காமெடி நடிகருடன் நயன்தாரா... இம்முறை ஆர்.ஜே.பாலாஜியுடன் நடிக்கிறார்...
முன்னணி நடிகர்களுக்கு கால்ஷீட் ஒதுக்கி வந்த நடிகை நயன்தாரா குறிப்பிட்ட காலகட்டத்துக்கு பிறகு சோலோ ஹீரோயின் கதைகளில் நடிக்கத் தொடங்கினார். அறம், மாயா போன்ற பல படங்களில நடித்தார்.
இந்த படங்களில் எனக்கு முக்கியத்துவம் இருக்கும் வகையில் மார்க்கெட் இல்லாத ஹீரோக்களை நடிக்க வைத்தார். கடந்த ஆண்டு வெளியான கோலமாவு கோகிலா படத்தில் யோகி பாபுதான் நயன்தாராவுக்கு அடுத்து நடித்திருந்த மார்க்கெட் உள்ள நட்சத்திரம். தற்போது மற்றொரு காமெடி நடிகருடன் இணைந்து நடிக்கிறார் நயன்தாரா.
வட கறி, ஜில் ஜங் ஜக், முத்தின கத்திரிக்கா, தேவி, கடவுள் இருக்கான் குமாரு, கவலை வேண்டாம், இவன் தந்திரன் போன்ற பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்திருப் பவர் ஆர்.ஜே.பாலாஜி . இவர் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் படத்தில்தான் நயன்தாரா நடிக்க உள்ளார்.
முன்னதாக நயன்தாரா நடித்த நானும் ரௌடி தான், வேலைக்காரன் படங்களில் ஆர்.ஜே. பாலாஜியும் நடித்திருந்தார். அப்போதிலிருந்து நயன்தாராவுடன் பாலாஜி நட்புடன் பழகி வருகிறார். அந்த நட்பு தற்போது கைகொடுத்தி ருக்கிறது ஆர்.ஜே.பாலாஜி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் அடுத்த படம் 'மூக்குத்தி அம்மன்' என தலைப்பிடப்பட்டுள்ளது.
எல்.கே.ஜி படத்தை தயாரித்த வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமே இப்படத்தை யும் தயாரிக்கிறது. இதில் தான் நயன்தாரா இணைந்து நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.