நடிகர் பிருத்விராஜ் சொகுசு காரை பதிவு செய்ய மறுத்த அதிகாரிகள்... வரி ஏய்ப்பு செய்ய முயன்றதை கண்டுபிடித்தனர்...
அபியும் நானும், மொழி போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பிருத்விராஜ். மலை யாள நடிகரான இவர் ஒரு கார் பிரியர். புதிய தொழில் நுட்பங்களுடன் அறிமுகமாகும் கார்களை உடனே வாங்கிவிடுவார்.
சமீபத்தில் ஒரு கோடியே 64 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை வாங்கினார். அதை பதிவு செய்ய கொச்சி வட்டார மோட்டார் போக்குவரத்து துறைக்கு விண்ணப்பம் செய்துள்ளார். இந்த விண்ணப்பத்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் நிராகரித்து திருப்பி அனுப்பி விட்டனர். அதற்கு காரணம் காரின் ஒரிஜினல் விலையை விட குறைத்துகாட்ட வரியை ஏய்ப்பு செய்ய முயன்றாராம்.
அதாவது காரின் உண்மையான மதிப்பு ஒரு கோடியே 64 லட்சம். ஆனால் பிருத்விராஜ் காரின் மதிப்பை குறைத்து ஒரு கோடியே 34 லட்சம் என தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர் வரி ஏய்ப்பு செய்ய முயற்சித்துள்ளார் என்பதை அதிகாரிகள் கண்டுபிடித்து காரை பதிவு செய்ய மறுத்துவிட்டனர். அபராத கட்டணத்துடன் கட்டினால்தான் காரை பதிவு செய்ய முடியும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.