ldquoசச்சின், டிராவிட் எனப் பார்த்திருக்கிறேன் ஆனால் கோலி வேற மாதிரி..!rdquo- பெருமிதத்துடன் கங்குலி
இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திரக் கேப்டன் விராட் கோலியை வெகுவாகப் பாராட்டியுள்ளார் இந்திய அணியின் ‘தாதா’ கங்குலி.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியை வென்ற கையுடன் அதே அணிக்கு எதிரான டி20 போட்டிகளிலும் இந்தியக் கிரிக்கெட் அணி கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தென்னாப்பிரிக்க மண்ணிலேயே முதன்முறையாக இந்திய அணியை வெற்றி பெறச்செய்துள்ளது கேப்டன் கோலியின் தலைமையிலான இந்தியக் கிரிக்கெட் அணி.
அடுத்தடுத்து விளையாடிய இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெளுத்து வாங்குகிறது. கேப்டன் என்பதையும் தாண்டி அணியின் முக்கிய வீரனாகக் கேப்டன் கோலியும் அதிரடி சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.
இந்நிலையில், கேப்டன் கோலி குறித்து இந்திய அணியின் டாப் பேட்ஸ்மேன்களுள் ஒருவரான முன்னாள் நட்சத்திர வீரர் கங்குலி கூறுகையில், “உண்மையில் கோலியின் தலைமைப் பண்பும், அவரது பேட்டிங் திறனும் வியப்பாக இருக்கிறது.
அணியில் உண்மையான ஆட்டத்தை டிராவிட்டிடமும் சச்சினிடமும் பார்த்திருக்கிறேன். ஆனால், கோலி வேறு மாதிரியான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு கேப்டனாகவும் சரி, பேட்ஸ்மேனாகவும் சரி, கோலி தனது அதிரடியில் இருந்து பிறழாமல் ஆடிக்கொண்டிப்பது பாராட்டுக்குரியது” எனப் புகழ்ந்துள்ளார்.