மணிரத்னம் இயக்கத்தில் மகனுடன் நடிக்கிறார் ஜெயம் ரவி... 2 முறையாக இணையும் தந்தை- மகன்...
கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை அதே பெயரில் திரைப்படமாக இயக்குகிறார் மணிரத்னம். இதில் வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம்.
ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், குந்தவையாக கீர்த்தி சுரேஷ், மற்றும் பார்த்திபன், ஜெயராம், த்ரிஷா உள்பட பலர் நடிக்கவுள்ளனர்.
இந்த படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஜெயம் ரவியின் மகன் ஆரவ் நடிக்கிறார். இவர் ஏற்கனவே தந்தை ஜெயம் ரவியுடன் இணைந்து 'டிக் டிக் டிக்' படத்தில் நடித்திருந்தார். தற்போது மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
வரும் டிசம்பர் முதல் தாய்லாந்தில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.