ரகுல், ராஷ்மிகா, நித்யா, விஜய்தேரகொண்டா கோவாவில் கூட்டணி... புதுடிரெண்ட் செட் செய்வது எப்படி...
நடிகர் விஜய்தேவர கொண்டா, நடிகைகள் நித்யா மேனன், ராஷ்மிகா மன்தன்னா, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் விரைவில் கோவா செல்கிறார்கள். வரும் 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை கோவாவில் 50 வது ஆண்டு சர்வதேச இந்திய திரைப்பட விழா நடக்கிறது.
இந்த விழாவில் முதல் நாளில் ரஜினிகாந்த்துக்கு சிறப்பு விருது (ஐகான்) வழங்கப்படுகிறது. அமிதாப்பச்சன் இதில் பங்கேற்கிறார்.
பின்னர் 28ம் தேதி நடக்கும் நிறைவு நாள் நிகழ்ச்சியில் விஜய்தேவரகொண்டா, நித்யாமேனன், ராஷ்மிகா, ரகுல் ஆகியோர் டிரெண்ட்செட்டர்கள் என்ற தலைப்பில் பேசவிருக்கிறார்கள். அப்போது தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொள்கின்றனர்.