துப்பாக்கிகளுடன் புதுமணத் தம்பதி.. நாகலாந்தில் பரபரப்பு

நாகலாந்தில் ஒரு இயக்கத் தலைவரின் மகன் திருமண வரவேற்பில் புதுமணத் தம்பதிகள் ஏகே56, எம்16 இயந்திர துப்பாக்கிளுடன் காட்சியளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

நாகலாந்தில் அரசை எதிர்த்து பல போராளிக் குழுக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றன. அவற்றுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்பட்டாலும் அவ்வப்போது அந்த குழுக்கள் எதிர்ப்பு குரலை ஒலித்து வருகின்றன.

இந்நிலையில், என்.எஸ்.சி.என்(யு) என்ற போராளிக் குழுவின் தலைவர் போகட்டோ கிபா என்பவரின் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கடந்த 9ம் தேதியன்று நடைபெற்றது. அதில் மணமகனும், மணமகளும் ஏ.கே.56, எம்.18 ஆகிய இயந்திர துப்பாக்கிகளுடன் போஸ் கொடுத்துள்ளனர். துப்பாக்கிகளுடன் அவர்கள் இருப்பதை பார்த்து வரவேற்பில் கலந்து கொண்டவர்கள் மிரட்சியடைந்தனர்.

இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே போகட்டோ கிபா ஒரு முறை தன்னை பற்றி அவதூறாக எழுதும் பத்திரிகையாளர்களை கொல்வேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது பெரிய சர்ச்சையானது. இந்நிலையில், இந்த வீடியோ தற்போது நாகலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

More News >>