பாரதிராஜா - ராதிகா உருக்கமான சந்திப்பு.. புதிய படத்தில் ஜோடி சேர  திட்டம்..

சினிமா ஸ்டுடியோவுக்குள் அடைபட்டு நடந்து வந்த திரைப்பட படப்பிடிப்புக்களை வெளியுலகிற்கும் கிராமங்களுக்கும் கொண்டு வந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா திரைப்படங்கள் இயகுவதை குறைத்துக் கொண்டிருந்தாலும் அவ்வப்பொழுது படங்களில் நடித்து வருகிறார். நடிகர் திலக் சிவாஜியை வைத்து முதல் மரியாதை என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் மீண்டும் ஒரு மரியாதை என்ற படத்தை இயக்க பாரதிராஜா இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியானது. இதில் பாரதிராஜாவே பிரதான வேடத்தில் நடிக்க உள்ளார் .   பாரதிராஜாவால் 1978ம் ஆண்டு கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ராதிகா. தற்போது அவர் தேனியில் ஒரு படத்தின் படப்பிடிப்பின்போது பாரதி ராஜாவை  சந்தித்துள்ளார்.   இதுகுறித்து தனது இணையதள பக்கத்தில் கூறியிருக்கும் ராதிகா, தேனியில் நடந்த ஒரு படப்பிடிப்பின் இடையே பாரதிராஜாவுடன் காலை உணவை பகிர்ந்து கொண்டதாக புகைப்படத்துடன் ஒரு பதிவை பதிவை வெளியிட்டுள்ளார். இந்த அரிய மற்றும் உருக்கமான  சந்திப்பையடுத்து பாரதிராஜா இயக்கவுள்ள மீண்டும் ஒரு மரியாதை படத்தில் ராதிகா முக்கிய வேடத்தில் நடிப்பார் என கூறபடுகிறது.
More News >>