விஜய்யின் தளபதி 64-ல் இணைந்த டி.வி தொகுப்பாளினி யார் தெரியுமா...? 2 படங்களில் ஏற்கனவே நடித்தவர்...
By Chandru
பிகில் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 திரைப்படத்தின் படக்குழுவில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி இணைந்துள்ளார்.
விஜய்யின் பிகில் தீவாளிக்கு திரைக்கு வந்து உலக அளவில் தற்போது 300 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது,. இந்நிலையில் தளபதி 64 படப்பிடிப்பு சூடு பிடித்திருக்கிறது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படப்பிடிப்பை படுவேகமாக நடத்தி வருகிறார். டெல்லியில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அனிருத் இசையமைக்கிறார். இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவும், பிலோமின்ராஜ் படத்தொகுப் பும் கவனிக்கின்றனர்.
இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவிருக்கிறார். மேலும், சாந்தனு , ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கவுரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உள்ளிட் டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் டிவி தொகுப்பாளினி ரம்யா சுப்ரமணியம் இணைந்திருக்கிறார். இவர் ஏற்கெனவே நித்யாமேனன் நடித்த ஓ காதல் கண்மணி, அமலா பாலின் ஆடை படங்களில் நடித்துள்ளார்.
டெல்லியில் தளபதி 64 படப்பிடிப்பு முடிந்து விரைவில் சென்னையில் தொடங்க உள்ளது.