உலக அளவில் தளபதி விஜய்யின் பிகில் பட வசூல்..சிங்கப்பெண் பொல்லம்மா புது தகவல்...
By Chandru
தளபதி விஜய் நடித்துள்ள 'பிகில்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். அட்லி இயக்கியிருந்தார். ஏஜிஎஸ் எண்டர்டெயின் மென்ட் தயாரித்திருந்தது.
இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் அதிரடி காட்டியிருந்தார். சிங்கப்பெண்ணே பாடல் சூப்பர் ஹிட் ஆனது பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்த படத்தில் சிங்கப்பெண்களாக வர்ஷா பொல்லம்மா, ரெபா மோனிகா ஜான், இந்துஜா, அம்ரிதா போன்றோர் நடித்திருந்தனர். ஏற்கெனவே இப்பட்த்தின் வசூல் 200 கோடியை தண்டியாதாக தகவல் வளியானது, ய்ஹ்ற்போது புதிய வசூல் நிலவரத்தை பிகில் நடிகை பகிர்ந்திருக்கிறார்.
சிங்கப் பெண்களாக நடித்தவர்களில் ஒருவரான வர்ஷா பொல்லம்மா பிகில் படம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் ராயப்பன் லுக்கில் விஜய் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, 'பிகில்' உலக அளவில் 300 கோடி வசூலித்துள்ளதாக ஹேஷ்டேக் பகிர்ந்துள்ளார்.