தளபதி 64  புது தோற்றம், புது தகவல்..  பேராசிரியராக நடிக்கிறார்...?

தளபதி விஜய் நடித்து வரும் படம் தளபதி 64 படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கியவர். ஏற்கனவே மாநகரம் படம் இயக்கியிருந்தார்.   தளபதி 64ல் விஜய் கேங்ஸ்டராக நடிக்கிறார் என்று கூறப்பட்டு வந்தநிலையில் தற்போது கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் மாளவிகா கதாநாயகி யாக நடிக்கிறார். வில்லன் வேடம் ஏற்று நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் விஜய் சேதுபதி. இதற்காக பெரும் தொகை சம்பளமாக தரப்படுகிறது.     சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து தற்போது டெல்லியில் 2ம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.   அங்குள்ள கல்லூரி ஒன்றில்  ஷூட்டிங் நடப்பதாக தகவல் வருகிறது. அத்துடன் விஜய் படப்பிடிப் பிற்கு செல்லும்போது விஜய்யின் தோற்றத்தை ரசிகர்கள் அவ்வப்போது படம் எடுத்து வெளியிடுகின்றனர்.  தற்போது விஜய் புகைப்படம் ஒன்று நெட்டில் தளபதி 64 பெயரில் வலம் வந்துக்கொண்டிருக்கிறது. அதில் மாணவர்களுக்கு மத்தியில்  அமர்ந்திருக்கும் விஜய்யின் கழுத்தில் ஐடி கார்ட் இருப்பதுபோன்று கெட்டப் அணிந்திருக்கிறார்.   ரசிகர்களின் மற்றொரு போஸ்டரில் பந்தவான இருக்கையில் கால்மேல் கால்போட்டு ஸ்டைலாக அமர்ந்திருக்கும் விஜய்யின் ஒரு கையில் ரிவால்வர் வைத்திருப்பதுபோன்று மாஸ் ஆக போஸ் அளித்திருக்கும் காட்சி இடம் பெற்றிருக்கிறது.
More News >>