ஆந்திரா சிஎம்மும் நானே... கேரளா சிஎம்மும் நானே.. முதல்வராக கலக்கும் மம்மூட்டி ...
திரைப்படங்களில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக நடிப்பவர் பெயரை குறிப்பிடாமல் உத்தேசமாகவே நடிப்பார்கள். அப்போதுதான் தணிக்கையில் பிரச்னையில்லாமல் படம் வெளியாகும். ஆனால் ஒரே நடிகர் இரண்டு மாநில முதல்வராக நடித்துள்ள சுவாரஸ்யம் நடந்திருக்கிறது. அந்த நடிகர் வேறுயாருமல்ல யதார்த்த நடிகர் என பாராட்டப்பெறும் மம்மூட்டிதான்.
ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியாக கடந்த ஆண்டு தெலுங்கு படமொன்றில் நடித்திருந்தார் மம்மூட்டி. தற்போது மலையாளத்தில் உருவாகும் 'ஒன்' படத்தில் கேரள முதல்வர் பினராய் விஜயன் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தை சந்தோஷ் விஸ்வநாதன் இயக்குகிறார். இந்நிலையில் கேரள முதல்வர் அலுவலுகத்துக்கு சென்று பினராய் விஜயனை சந்தித்து வாழ்த்து பெற்றார் மம்முட்டி.
இதுபற்றி முதல்வர் பினராய் விஜயன் தனது வலை தள பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து,'மம்மூட்டி என்னை அலுவலகத்தில் சந்தித்தார். படப்பிடிப்பு ஒன்று குறித்து என்னிடம் அவர் பேசினார்' என தெரிவித்துள்ளார்.