ஜி.வி.பிரகாஷ் ஜோடியானார் அனேகன் ஹீரோயின்
நாச்சியார் படத்திற்கு பிறகு, ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகி இருக்கும் படத்திற்கு அனேகன் படத்தில் நடித்த அமைரா தஸ்த்தூரை நடிக்க உள்ளாராம்.
பாலா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நாச்சியார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில், நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷிற்கு இந்தப் படம் திருப்பு முனையாகவே அமைந்துள்ளது.
இந்நிலையில், நாச்சியார் வெற்றியை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார். அந்த வகையில், அடுத்ததாக நடிக்க இருக்கும் புதிய படத்திலும் நல்ல கதாப்பாத்திரத்தில் ஒப்பந்தமாகி உள்ளாராம். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த அனேகன் படத்தில் நடித்த அமைரா தஸ்தூர் ஜி.வியுடன் ஜோடிபோடுகிறார்.
த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இந்த புதிய படத்தை இயக்குகிறார். இதன் மூலம் இயக்குனரும் ஹீரோவும் இரண்டாவது முறையாக இந்த படத்தின் மூலம் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.