நடிகை மைனா இரண்டாம் திருமணம்...முதல்கணவர் தற்கொலைக்கு பிறகு பரபரப்பு...

டிவி தொடர்களில் குடும்ப பாங்காகவும், கிராமத்து பெண் வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மைனா. இவர் நந்தினி, சரவணன் மீனாட்சி, பிரியமானவள், கல்யாணம் முதல் காதல் வரை, சின்னத்தம்பி, அரண்மனைக்கிளி, டார்லிங் டார்லிங் ஆகிய டிவி தொடர்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார். வம்சம் என்ற படம் மூலம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.  கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜா ராணி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையில் கார்த்திக் என்ற ஜிம் மாஸ்டரை கடந்த சில வருடங்களுக்கு முன் காதல் திருமணம் செய்துகொண்டார்  நந்தினி.  புகுந்த வீட்டில் அடிக்கடி பிரச்சனைகள் வலுத்தது.   இதனால்  கார்த்திக் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த நேரத்தில் நந்தினி ஒரு டிவியி லைவ் ஷோவில்  இருந்தார். கணவரின் தற்கொலை  குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால்  அவர் எந்தவித பதற்றமும் காட்டவில்லை.   இந்நிலையில் நடிகர் யோகேஷ்வரன் என்பவரை நந்தினி காதலித்து வருவதாக தகவல் வெளியானது.  அவரும் ஒரு டிவி நடிகர்தான். சத்யா, நாயகி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார். சமீபத்தில்  மைனாவுக்கு இரண்டாம் திருமணத்திற்கான நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில் தற்போது யோகேஸ்வரன் -  மைனா நந்தினிக்கு திருமணம் நடந்துள்ளது. இது திரையுலகிலும் சின்னத்திரை வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
More News >>