டிவிட்டரை தெறிக்கவிடும் குஷ்பு விலகியது ஏன் தெரியுமா...? சமூக வலைதளங்கள் கட்டாய தேவை இல்லையாம்...
நடிப்பிலிருந்து ஒதுங்கிய குஷ்பு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார். காங்கிரஸ் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். டிவிட்டர், இன்ஸ்டாகிரா பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கி தெறிக்கவிட்டு வரும் அவர் திடீரென்று டிவிட்டர் பக்கத்திலிந்து விலகியிருக்கிறார். குஷ்புவின் இந்த விலகல் அவரது ரசிர்களுக்கு ஷாக்காக இருந்தாலும் அதுகுறித்து குஷ்புவே விளக்கம் தந்திருக்கிறார்.
'டிவிட்டரில் அநாகரீ கருத்துக்கள் அதிகம் வருவது டன், எதிர்மறை தகவல்களும் வருகிறது. என்னை டிவிட்டரில் சிலர் வம்புக்கு இழுத்து வந்தனர். அதற்கு பயந்துநான் விலகவில்லை. நான் யாராக இல்லையோ அப்படி என்னை மாற்றிக்கொண் டிருந்தனர். என்னை கிண்டல் கேலி செய்கிறார்கள் என்பதற்காக நான் டிவிட்டரிலிருந்து வெளியேற வில்லை. எனது அறிவை நல்லபடியாக வைத்தி ருக்க நான் டிவிட்டரிலிருந்து வெளியேற வேண்டி உள்ளது.
என்னைப் பொறுத்தரை சமூக வலை தளங்கள் கட்டாயம் தேவை என்ற எண்ண வில்லை. இன்ஸ்டாகிராமில் நான் தொடர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறன் . இன்ஸ்டா கிராமில் எதிர்மறையான விஷயங்களை பார்க்க வில்லை. அதில் நான் தொடர்ந்து பயணிப்பேன்' என்றார்.